Main Menu

யாழில் 200 போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் 200 போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) இரவு சந்தேகத்திற்கு இடமான இரு இளைஞர்களை பொலிஸார் சோதனையிட்ட போது , அவர்களிடம் இருந்து 200 போதை மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியிருந்தனர்.

அதனை அடுத்து, இரு இளைஞர்களையும் கைது செய்த பொலிஸார் அவர்களை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.