மைக்கேல் கிளார்க்கிற்கு தோல் புற்றுநோய்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான மைக்கேல் கிளார்க்கிற்கு தோல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கிளார்க் தனது உடல்நிலை குறித்த தகவலை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார்.
அதேநேரத்தில், ஏனையவர்களும் தொடர்ந்து தங்கள் உடல்நலப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நேர்த்தியான துடுப்பாட்டம், கிரிக்கெட் நுணுக்கங்களுக்கு பெயர் பெற்ற கிளார்க், 2004 -2015 ஆம் ஆண்டுக்கு இடையில் 115 டெஸ்ட், 245 ஒருநாள் மற்றும் 34 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
கிளார்க் அவுஸ்திரேலியாவை 74 டெஸ்ட் போட்டிகளில் (47 வெற்றிகள், 16 தோல்விகள்) மற்றும் 139 ஒருநாள் போட்டிகளில் வழிநடத்தியுள்ளார்.
அவரது தலைமையின் கீழ், அவுஸ்திரேலியா 2013-14 இல் (5-0) ஆஷஸை மீண்டும் வென்றது மற்றும் 2015 உலகக் கிண்ணத்தை வென்றது.
11 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட் பயணத்தில் அவுஸ்திரேலியாவுக்காக விளையாடிய கிளார்க், சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
பகிரவும்...