Main Menu

மென்மையான இருதரப்பு வர்த்தக மேம்-படுத்தலுக்காக சீனாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ; அமைச்சரவை அங்கீகாரம்மென்மையான இருதரப்பு வர்த்தக மேம்படுத்தலுக்காக சீனாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ; அமைச்சரவை அங்கீகாரம்

இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான மென்மையான இருதரப்பு வர்த்தக மேம்படுத்தலுக்கான செயற்பாட்டுக் குழுவை நிறுவுவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையொபமிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான மென்மையான இருதரப்பு வர்த்தக மேம்படுத்தலுக்கான செயற்பாட்டுக் குழுவை நிறுவுதல் உகந்ததாக உள்ளது.

அதன்மூலம் இருதரப்பு வர்த்தகத்தில் பயன்பாட்டுக்கு எடுக்கப்படாத சாத்தியங்களை திறந்து விடுதல், வர்த்தகம் சார்ந்த சவால்களுக்கு முகங்கொடுத்தல் மற்றும் இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தக வீச்செல்லையை அதிகரித்தல் மற்றும் தரத்தை மேம்படுத்துதல் குறிக்கோளாக உள்ளது.

அதற்கமைய, முன்மொழியப்பட்ட வகையில் செயற்பாட்டுக் குழுவை நிறுவுவதற்காக சீன வாணிப அமைச்சு மற்றும் இலங்கையின் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையொப்பமிடுவதற்கு வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதேவேளை கைத்தொழில், தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சு மற்றும் மக்கள் சீன வாணிப அமைச்சு ஆகியவற்றுக்கிடையிலான கைத்தொழில் வழங்கல் சங்கிலிகளின் பொருளாதார ஒத்துழைப்பை பலப்படுத்துதல் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பொது அபிவிருத்தி, பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில் வாய்ப்புகள் போன்ற பரஸ்பர நன்மைகளை பெறும் குறிக்கோளுடன் கைத்தொழில், தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சு, மற்றும் சீனாவின் வாணிப அமைச்சு ஆகியவற்றுக் இடையிலான கைத்தொழில் வழங்கல் சங்கிலிகளின் பொருளாதார ஒத்துழைப்பை பலப்படுத்துதல் மற்றும் வசதிகளை வழங்குவதற்கு இலங்கை மற்றும் மக்கள் சீனக் குடியரசு ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, கைத்தொழில், தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சு, மற்றும்  சீன வாணிப அமைச்சு ஆகியவற்றுக் இடையில் உத்தேச புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையொப்பம் இடுவதற்கு கைத்தொழில், தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பகிரவும்...