Main Menu

மூன்­றா­வது அணி சாத்­தி­ய­மில்லை – கெஹெ­லிய

அமைச்சர் சஜித் பிரே­ம­தாச மற்றும் சுதந்­திரக் கட்­சி­யினர் இணைந்து மூன்­றா­வது அணி ஒன்றை உரு­வாக்கும் சாத்­தியம் மிகவும் குறை­வாக இருக்­கின்­றது. அவ்­வாறு   மூன்­றா­வது அணி  உரு­வா­கு­வ­தற்­கான அர­சியல் சூழல் தற்­போது இல்லை  என்று   மஹிந்த அணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கெஹெ­லிய ரம்­புக்­வெல தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும்  ஐக்­கிய தேசிய கட்­சியின் பிரதித் தலைவர்  சஜித் பிரே­ம­தாச ஆகிய  தப்­புக்கள் இணைந்து எதிர்­வரும்  ஜனா­தி­பதி  தேர்­தலில் மூன்­றா­வது அணி­யாக  கள­மி­றங்க முயற்­சிக்­கப்­ப­டு­வ­தாக  வெளி­வரும் தக­வல்கள் குறித்து  விப­ரிக்­கை­யி­லேயே அவர் இதனை குறிப்­பிட்டார். 

மஹிந்த அணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கெஹெ­லிய ரம்­புக்­வெல  மேலும் குறிப்­பி­டு­கையில்,

தற்­போ­தைய அர­சியல் சூழலில் மூன்­றா­வது அர­சியல் கூட்­டணி உரு­வா­வ­தற்­கான  சாத்­தி­யங்கள்  மிகவும் குறை­வாகும். அவ்­வாறு  மூன்­றா­வது  கூட்­டணி உரு­வா­கு­வ­தற்­கான சாத்­தியம் இல்லை என்றே நாங்கள் கரு­து­கின்றோம். 

அது­மட்­டு­மன்றி அமைச்சர் சஜித் பிரே­ம­தாச  ஒரு­போதும்  ஐக்­கிய தேசிய கட்­சி­யை­விட்டு செல்­ல­மாட்டார்.  அது­மட்­டு­மன்றி நாட்டில் தற்­போது அவ்­வாறு ஒரு மூன்­றா­வது அணி உரு­வா­கு­வ­தற்­கான  அர­சியல் சூழலும் இல்லை.  

இதே­வேளை  ஐக்­கிய தேசிய கட்சி  யாரை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிய­மித்­தாலும்  நாங்கள் அவரை எதிர்­கொள்ள தயா­ராக இருக்­கின்றோம். எந்­த­வொரு திற­மை­யான வேட்­பா­ளரை நிறுத்­தி­னாலும் பர­வா­யில்லை. 

எமக்கு அவர் சவா­லா­ன­வ­ராக இருக்­க­மாட்டார். 

இவர் வந்தால் நல்­லது அவர் வந்தால் நல்­லது என்ற விட­யங்கள் எம்­மிடம் இல்லை. யார் வந்­தாலும் நாங்கள் எதிர்­கொண்டு  போட்­டி­யிட்டு வெற்­றி­யீட்­டுவோம். எமது அணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் எதிர்­வரும் 11 ஆம் திகதி அறி­விக்­கப்­ப­டுவார்.  அதற்­கான  பணிகள் தயா­ரா­கி­விட்­டன. முன்னாள்  பாது­காப்பு செயலர்  களத்தில் இறங்க தயா­ரா­கி­விட்டார்.    

ஒரு புதிய தலை­மைத்­து­வத்தில் நாங்கள் நாட்டை முன்­கொண்டு செல்வோம். 

நாங்கள் ஆட்சிக்கு வந்ததும்  பல்வேறு விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்படுவோம். குறிப்பாக  அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தை திருத்துவது குறித்து ஆலோசிப்போம் என்றார். 

பகிரவும்...