முதலாவது பிறந்த நாள் வாழ்த்து – சுதாகரன் ஆதீசன் (19/08/2025)

ஒல்லாந்தில் வசிக்கும் சுதாகரன்-நந்தினி தம்பதியினரின் செல்வப்புதல்வன் ஆதீசன் தனது முதலாவது பிறந்த நாளை இன்று 19ம் திகதி ஆவணி மாதம் செவ்வாய்க்கிழமை தாயகத்தில் அப்பம்மா, அம்மம்மா, மற்றும் தாத்தாவுடன் இணைந்து மிகவும் விமர்சையாக கொண்டாடி மகிழ்கின்றார்.
இன்று முதலாவது பிறந்த நாளை கொண்டாடும் ஆதீசன் செல்லத்தை அன்பு அப்பா சுதாகரன், அன்பு அம்மா நந்தினி, தாயகத்தில் வசிக்கும் தாத்தா, அப்பம்மா, அம்மம்மா, பெரியப்பாமார், பெரியம்மாமார், சித்தப்பாமார், சித்திமார், மாமாமார், அத்தைமார், அக்காமார், அண்ணாமார், மச்சான்மார், மச்சாள்மார் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஒட்டிசுட்டான் தான் தோன்றிஸ்வரர் அருளோடு எல்லா செல்வங்களும் பெற்று சீரோடும் சிறப்போடும் பார் போற்றும் பிள்ளையாக வாழ வாழ்த்துகின்றார்கள்.
இன்று முதலாவது பிறந்த நாளை கொண்டாடும் ஆதீசன் செல்லத்தை TRT தமிழ் ஒலி குடும்பமும் எல்லா வளங்களும் நிறைவாக பெற்று சிறப்போடு வாழ வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு அண்ணா யசிந்தன், அன்பு அக்கா கிசானி
இருவருக்கும் எமது நன்றி