முகவரி இல்லாத கடிதத்திற்கு நான் பதில் சொல்லத் தேவையில்லை – கமல்

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு நேற்றைய தினம் மதுரையில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் கருத்து தற்போது சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
அத்தோடு, அரசியல் தலைவர்கள் பலரும் விஜய்யின் பேச்சுக்கு விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் விஜய் தனது உரையில் “நான் சினிமாவில் மார்கெட் போன பிறகு அரசியலுக்கு வரவில்லை. உச்சத்தில் இருக்கும் போதே வந்திருக்கிறேன்” எனக் குறிப்பிட்டார்.
இக்கருத்தின் மூலம் விஜய் மறைமுகமாகக் கமல்ஹாசனை தான் கூறினார் என பல கருத்துக்கள் பரவலாக கூறப்பட்டன.
இது குறித்து கமல்ஹாசனிடம் வினவியபோது, “அவர் என் பெயரைக் குறிப்பிட்டு சொல்லவில்லை தானே! பின் நான் ஏன் பதில் சொல்ல வேண்டும். முகவரி இல்லாத கடிதத்திற்கு யாராவது பதில் கொடுப்பார்களா? அவர் என் தம்பிதான்” என்று பதிலளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பகிரவும்...