மீனை பச்சையாக உட்கொண்டு ஆபத்தில்லை என்பதை காண்பித்த முன்னாள் அமைச்சர்!
கொரோனா தொற்று அச்சத்தால் மீனை வாங்குவதற்கு மக்கள் அச்சம் கொண்டுள்ள நிலையில் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் திலிப் வெதஆரச்சி, மக்கள் மீன் சாப்பிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டிருந்த அவர், மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டதுடன் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் உடன் மீனை உட்கொண்டு காண்பித்தார்.
அத்தோடு இது தொடர்பாக பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்குவது அரசாங்கத்தின் மற்றும் சுகாதார அமைச்சின் கடமை என்றும் அவர் கூறினார்.
மேலும் தற்போது காணப்படும் சூழ்நிலையில் மீனவர் சமூகத்திற்கு பொதுமக்கள் செய்யக்கூடிய மிகப் பெரிய உதவி மீன் பொருட்களை வாங்குவதாகும் என்றும் திலிப் வெதஆரச்சி குறிப்பிட்டார்.
பகிரவும்...