மாலியில் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 40க்கும் மேற்பட்டோர் பலி

மாலியின் மேற்கு பகுதியில் சுரங்கம் இடிந்து விழுந்ததில் நாற்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மாலியின் தங்கம் நிறைந்த கெய்ஸ் பகுதியில் உள்ள கெனீபா நகருக்கு அருகில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுரங்கத் தொழிலாளர்கள் பெரும்பாலும் சட்டவிரோதமான முறைகளைப் பயன்படுத்துவதால் இவ்வாறான விபத்துக்கள் ஏற்படுகின்றன.
கடந்த ஜனவரி மாத இறுதியில் தென்மேற்கு மாலியில் தங்கத்திற்காகத் தோண்டிய சுரங்கப்பாதையில் வெள்ளம் புகுந்தமையினால் பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்திருந்தனர்.