மஹிந்தவுக்கு நெருக்கடி ஏற்படுத்தினால் அதற்கெதிராக முன்னிலை ஆவோம் ; திலும் அமுனுகம
இலங்கை ஒற்றையாட்சி நாடாக இருப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷவே காரணம். அவருக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தினால் அதற்கு எதிராக நாங்கள் முன்னிலையாவோம்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் மக்கள் அரசாங்கத்துக்கு பாடம் புகட்டுவார்கள் சர்வஜன சக்தியின் தேசிய அமைப்பாளர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற தொழில் முயற்சியாளர்களுடன் சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
பொய்யை மாத்திரம் பிரதான கொள்கையாக வைத்து அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. தேர்தல் காலத்தில் நடைமுறைக்கு சாத்தியமில்லாத உலகில் இல்லாத பல வாக்குறுதிகளை அரசாங்கம் வழங்கியது.
இன்று அந்த போலியான வாக்குறுதிகள் அரசாங்கத்துக்கு எதிராக திரும்பியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே இந்த நாட்டு மக்களின் உயிர் வாழும் உரிமையை உறுதிப்படுத்தினார்.
அவரால் தான் இந்த நாட்டின் ஒற்றையாட்சியை பாதுகாத்தார். தம்புத்தேகம உடும்பின் உயிரையும் மஹிந்தவே பாதுகாத்தார்.
அரசியலில் தற்போது வேறுபாடுகள் காணப்பட்டாலும் மஹிந்த ராஜபக்ஷ மீதான எமது கௌரவம் என்றும் உள்ளது.
அவருக்கு நெருக்கடி ஏற்படுத்தினால் அதற்கு எதிரான முன்னிலையாகுவோம் என்பதை அரசாங்கத்துக்கு குறிப்பிட்டுக் கொள்கிறோம்.
அரசாங்கத்தின் போலியான வாக்குறுதிகளை மக்கள் தற்போது விளங்கிக் கொண்டுள்ளார்கள். உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் அரசாங்கத்துக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்பதை உறுதியாக குறிப்பிட முடியும் என்றார்.
பகிரவும்...