Main Menu

மன்மோகன் சிங் உடல்நிலை சீராக உள்ளது: எய்ம்ஸ் மருத்துவமனை

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலை சீராக உள்ளதாகவும், முன்னேறி வருவதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

மன்மோகன் சிங்இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 12-ந்தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் மூச்சுச் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என செய்தி வெளியானது.
13-ந்தேதி மன்மோகன் சிங் உடல்நிலை சீராக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய மக்களவை எம்.பி.யுமான  ராகுல் காந்தி எய்ம்ஸ் மருத்துவமனை சென்று மன்மோகன்சிங் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
மன்மோகன் சிங் விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். மன்மோகன் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் படங்கள் வெளியானது. அவரது உடல்நிலை குறித்து சில செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் 89 வயதாகும் மன்மோகன் சிங்கின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், உடல்நிலை தேறிவருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...