மன்னாரில் பெரும் இழப்பு – வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆயிரக் கணக்கான கால்நடைகள்
சீரற்ற வானிலைக்கு மத்தியில், யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு புன்னையடி பகுதியில் கால்நடைகள் இறந்து கிடப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் நிலவும் காற்றுடன் கூடிய மழையுடனான வானிலையால், ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
நானாட்டான், மடு, மற்றும் மாந்தை மேற்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பகிரவும்...
