Main Menu

மனுஷ நாணயக்கார கைது

முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார , இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் இஸ்ரேலுக்கு இலங்கையர்களை வேலைக்கு அனுப்பிய விவகாரத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பில் இடம்பெற்றுவரும் விசாரணைகளின் பிரகாரமே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளிப்பதற்காக மனுஷ நாணயக்கார இன்று முற்பகல் முன்னிலையாகி இருந்த நிலையிலேயே கைது இடம்பெற்றுள்ளது.

கைதுசெய்யப்பட்ட மனுஷ நாணயக்காரவை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது.

பகிரவும்...
0Shares