Main Menu

மத்திய கிழக்குக்கு மேலதிகமாக போர்க் கப்பல்களை அனுப்புவதாக வெளியான செய்தியை பிரான்ஸ் மறுப்பு

மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கு மேலதிகமாக பத்து போர்க் கப்பல்களை அனுப்ப பிரான்ஸ் தயாராகி வருவதாக வெளியான தகவல்களை பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சு அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது.

வெளியான இந்த செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹார்முஸ் நீரிணையைப் பாதுகாக்க ஒத்துழைக்குமாறு தனது நட்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்திருந்த பின்னணியில் இந்த தகவல் வெளியாகியிருந்தது .

பிரான்சின் வானூர்தி தாங்கி போர்க்கப்பல் குழு, ஏற்கனவே கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளதகவும் அதில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை எனவும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது .