Main Menu

மத்திய அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழப்பு – மேலும் இருவர் காயம்

மத்திய அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.

அதிவேக வீதியில் பயணித்த கார், முன்னால் பயணித்த லொறியின் பின்புறத்தில் மோதியதில் விபத்து
சம்பவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது மேலும் இருவர் காயமடைந்த நிலையில் குருநாகல் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம் காரணமாக விபத்து சம்பவித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் பின் இருக்கையில் இருந்த பயணி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.