Main Menu

மட்டக்களப்பில் நடைபெற்ற உணவுக் கண்காட்சி

நான்கு மாதாகாலமாக சமையற் கலைப் பயிற்சியில் ஈடுபட்டு வந்த இளைஞர் யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

 

அம்மன் மகளிர் பவுண்டேஷனின் ஏற்பாட்டில், சுவிஸ் நாட்டிலுள்ள பொன்டானா பவுண்டேசன் நிறுவனத்தின் நிதி உதவியின் கீழ் இப்பயிற்சிநெறி நடைபெற்றது. இதில் மண்முனை வடக்கு மற்றும் மண்முனை மேற்கு ஆகிய பிரதேசங்களிலிருந்து 24 பேருக்கு இப்பயிற்சி வழங்கப்பட்டிருந்தது.

இப்பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்தவர்களுக்கு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், அவர்களால் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளும் இதன்போது கட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

அம்மன் மகளிர் பவுண்டேஷன் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் வேலாயுதம் வாமதேவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,  மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்றஉறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன்,  தமிழரசுக் கட்சின் இளைஞர் அணித் தலைவர் திவாகரன், எஸ்.ரி.ஏ நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் வர்ணகுலசிங்கம் கமலதாஸ், இணைப்பாளர் ஜினதாஸ ரஞ்ஜித்குமார்,  மற்றும் வவாளர்கள் என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

அம்மன் மகளிர் பவுண்டேஷனின் அமைப்பின் 6 வது ஆண்டை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட இப்பயிற்சிநெறியின் மூலம்,  சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கவும் கிராமிய பொருளாதாரத்தை அதிகரிக்கவும்,  பெரும் வாய்ப்பாக அமைவதாக இதன்போது நிறுவனத்தின் இணைப்பாளர் ஜினதாஸ ரஞ்ஜித்குமார் இதன்போது தெரிவித்தார்.