மக்கள் கட்டியெழுப்பிய அரசாங்கத்தினை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும் ; அமைச்சர் பிமல் ரத்நாயக்க

இலங்கை வாழ் மக்கள் இந்த நாட்டில் புதிய அரசியல் வரலாறொன்றை எழுத ஆரம்பித்துள்ளனர். நாடு முன்னோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளது. மக்களால் கட்டியெழுப்பப்பட்ட இந்த அரசாங்கத்தை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும்.
எமது இலக்கை அடையும் வரை நாம் அனைவரும் ஒன்றாக பயணிக்க வேண்டுமென போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை வாழ் மக்கள் புதிய வரலொன்றை எழுத ஆரம்பித்துள்ளனர். புதிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக ஒன்றுப்பட்ட இந்த மக்களுக்கு நாம் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
எமது மக்கள் வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு மலையகம் என அனைத்தையும் ஒன்றிணைத்துள்ளனர். சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்று என்பதை கடந்த இரண்டு பிரதான தேர்தலிகளின் போது காண்பித்துள்ளனர்.
செப்டம்பர் 21 ஆம் திகதி இலங்கை ஒரே இலங்கை உருவானது என நினைக்கிறேன். இலங்கை முன்னோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தினால் இந்த இலக்கை அடைய முடிந்துள்ளது.
ஆனால் நாட்டின் சாதாரண மக்கள் ஒன்றாக ஒன்றிணையும் போது எதிர்க்கட்சியினர் கூட்டு சேர முயற்சிக்கின்றனர்.
பிரிந்து செயற்பட்ட சஜித் பிரேமதாச, ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷ, ரவி கருணாநாயக்க, விமல் வீரவன்ச, மனோ கணேசன் உள்ள ஆகியோர் ஒன்றிணைந்துள்ளனர்.
எதிரிகளாக செயற்பட்டவர்கள் மீண்டும் நண்பர்களாக மாறியுள்ளனர். அன்று ரணில் விக்கிரமசிங்க மஹிந்தவுக்கு எதிராக வாக்களிக்குமாறு கோரினார்.
சஜித் பிரேமதாச சுமந்திரன் ஆகியோர் மஹிந்தவுக்கும் ரணிலுக்கு எதிராக வாக்களிக்குமாறு கோரினார்கள். இந்த நாட்டை வங்குரோத்து அடைய செய்த குழுவினர் இன்று மீண்டும் கூட்டு சேர்ந்துள்ளார்.
மக்களால் கட்டியெழுப்பப்பட இந்த அரசாங்கத்தை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும். எமது இலக்கை அடையும் வரை நாம் அனைவரும் ஒன்றாக பயணிக்க வேண்டும் என்றார்.
பகிரவும்...