Main Menu

மக்களின் விருப்பின்றி மன்னாரில் மேற்கொள்ளப்பட இருக்கும் கனிய மணல் அகழ்விற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடிக்கலாம்: நாடாளுமன்றில் ரவிகரன் எச்சரிக்கை

மன்னார்த்தீவில் மக்களின் விருப்பமின்றிக் கனிய மணல் அகழ்வதற்காக இன்று (19/2/2025) மேற்கொள்ளப்படவுள்ள கள ஆய்வினை உடனடியாக நிறுத்த வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்றுக் கோரிக்கை விடுத்துள்ளார்.

மக்களின் விருப்பமின்றி இந்தக் கள ஆய்வு இடம்பெற்றால் பாரிய அளவில் மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கக்கூடிய சூழ்நிலை நிலவுகிறது. இதனால் ஆபத்தான  நிலைமைகள் தோன்றலாம். இதன் காரணமாகச் சட்ட ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்களும் உண்டாகும் என ரவிகரன் மேலும் சுட்டிக்காட்டினார்.

பகிரவும்...
0Shares