மகளின் மருத்துவ செலவுக்காக மதுபான போத்தல்களை கடத்திய தந்தை
சொகுசு காரில் சட்டவிரோதமாக மதுபான போத்தல்களை கடத்திச் சென்ற சந்தேக நபர் ஒருவர் தொட்டுவாவ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தொட்டுவாவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் புத்தளம் – தொட்டுவாவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து 30 மதுபான போத்தல்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மாரவில பிரதேசத்தைச் சேர்ந்தவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மகளின் மருத்துவ செலவுக்கு தேவையான பணத்தை பெற்றுக்கொள்ளுவதற்காக மதுபான போத்தல்களை கடத்தியதாக பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தொட்டுவாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பகிரவும்...