Main Menu

போதைப் பொருட்களை ஒழிக்க இதுதான் வழி – விஜித ஹேரத்

போதைப்பொருட்களை ஒழிக்க காவல்துறை நடவடிக்கை மட்டும் போதாது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
போதைப்பொருள் விற்பனையையும் பாவனையையும் தடுக்க கிராம மட்டத்தில் சமூகங்கள் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சில் சிவில் சமூகத் தலைவர்களுடன் நடந்த கலந்துரையாடலின் போது அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
போதைப்பொருள் ஒழிப்புக்குக் கிராம மக்களின் ஈடுபாடு மிக அவசியம் எனவும் அவர் இதன்போது அமைச்சர் வலியுறுத்தினார்.
பகிரவும்...
0Shares