Main Menu

பொதுத் தேர்தலில் மொட்டுக் கட்சி தனித்துப் போட்டியிட உள்ளதாக மஹிந்த அறிவிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனித்துப் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை – நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (24) இடம்பெற்ற விசேட சந்திப்பொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.மக்களின் நிலைப்பாடு வாக்குகளின் ஊடாக வெளிப்படுத்தப் பட்டுள்ளது.அதனை நாம் ஏற்றுக் கொள்கின்றோம்.யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் கட்சி என்ற ரீதியில் நாம் இதுவரையில் தீர்மானிக்கவில்லை.எனினும் பொதுத் தேர்தலில் நாம் தனித்துப் போட்டியிடவுள்ளோம்.

பகிரவும்...