பெருவின் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைத்தண்டனை

பெருவின் முன்னாள் ஜனாதிபதி அலெஜான்ட்ரோ டோலிடோவுக்கு (Alejandro Toledo) 20 ஆண்டுகளுக்கும் அதிகளவான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரேசிலை தளமாகக்கொண்ட கட்டுமான நிறுவனம் ஒன்றுடன் இணைந்து ஊழலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனத்திடம் இருந்து 35 மில்லியன் அமெரிக்க டொலரை கையூட்டல் பெற்றதாக அலெஜான்ட்ரோ டோலிடோ மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதன்படி, அவருக்கு 20 ஆண்டுகளும் 6 மாதங்களும் சிறைத்தண்டனை விதித்து பெரு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
78 வயதான டோலிடோ 2001 முதல் 2006 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளார்.
இந்த நிலையில், ஐந்தாண்டுகளுக்கு முன்னர் கலிபோர்னியாவில் கைது செய்யப்பட்ட அலெஜான்ட்ரோ டோலிடோ, கடந்த ஆண்டு பெரு நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பகிரவும்...