Main Menu

பூஸா சிறைச்சாலையில் விசேட சோதனை நடவடிக்கை ; போதைப்பொருள் உட்பட பல்வேறு பொருட்கள் மீட்பு

பூஸா சிறைச்சாலையில் நேற்று புதன்கிழமை (30) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது போதைப்பொருள் உட்பட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது, சிறை கூண்டுகளில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 11 கையடக்கத் தொலைபேசிகள், 12 சிம் அட்டைகள், 03 சார்ஜர்கள் , 05 ஹெட்செட்கள், ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

பகிரவும்...