புறக்கோட்டை தீப்பரவல் – 16 தீயணைப்பு வாகனங்கள் களத்தில்
புறக்கோட்டை – பங்கசால வீதியில் உள்ள ஒரு விற்பனை நிலையத்தில் ஏற்பட்டுள்ள தீயை கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட தீயணைப்பு வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 16 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 60 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தீயைக் கட்டுப்படுத்தும் பணிகள் தற்போது தீவிரமாக நடைப்பெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
