புத்தரின் உருவச்சிலைகளை நிறுவுவதற்காகக் காணிகள் பறிமுதல் செய்யப்படுவதாக ரவிகரன் குற்றச்சாட்டு

பறிமுதல் செய்யப்பட்ட காணிகளின் எல்லைக்கற்களாக விகாரைகள் பயன்படுத்தப்படுவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் குழுநிலை விவாதத்தில் கருத்துரைக்கும் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அத்துடன், புத்தரின் உருவச்சிலைகளை நிறுவுவதற்காக காணிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமிழ் மக்கள் தொல்பொருள் விடயத்தில் பாரியளவிலான அநீதியை எதிர்கொண்டு வருவதாக இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளையதம்பி ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
தொல்பொருள் விடயத்தில் தமிழ் கல்வியியலாளர்கள் இணைத்துக்கொள்ளப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.