Main Menu

புதுக்குடியிருப்பில் T56 ரவைகளுடன் ஒருவர் கைது

முல்லைத்தீவு மாவட்டத்தின் தேராவில் பகுதியில் T56 ரக துப்பாக்கிக்குரிய ரவைகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 38 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேராவில் இளங்கோபுரம் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், நேற்றையதினம் மாலை மோட்டார் சைக்கிளில் புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது, விஷேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முல்லைத்தீவு விஷேட அதிரடி படையினரால் வழிமறித்து சோதனை செய்யப்பட்டுள்ளார்.

சோதனையின் போது குறித்த நபரின் உடமையில் T56 ரக துப்பாக்கிக்குரிய 8 ரவைகள் வைத்திருந்தமை கண்டறியப்பட்டதையடுத்து, மோட்டார் சைக்கிளுடன் அந்த 8 ரவைகளும் கைப்பற்றப்பட்டதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸ் விசாரணைகளின் பின்னர் இன்றையதினம் (12) முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

பகிரவும்...