Main Menu

புதிய பிரதமர் விரைவில் – பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன்

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய பிரதமரை நியமிப்பார் என புதன்கிழமை அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், பல தசாப்தங்களில் பிரான்சின் மோசமான நெருக்கடிக்கு மத்தியில், பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் முன்கூட்டிய பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு எதிராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இரண்டு ஆண்டுகளில் பிரான்சின் ஐந்தாவது பிரதமரான Sébastien Lecornu, அமைச்சரவை வரிசையை அறிவித்த சில மணிநேரங்களுக்குப் பின்னர், திங்களன்று தனது  இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார், இது நவீன பிரான்சில் மிகக் குறுகிய கால நிர்வாகமாக மாறியது.

ஆனால் மக்ரோனின் வேண்டுகோளின் பேரில், நெருக்கடியைத் தணிக்கும் முயற்சியில் Sébastien Lecornu மைய இடது முதல் மைய வலது வரையிலான அரசியல் தலைவர்களுடன் மேலும் ஆலோசனைகளை நடத்தியுள்ளார்.

பகிரவும்...
0Shares