புதிய அரசியலமைப்பு விரைவில் கொண்டு வரப்படும் – கடற்றொழில் அமைச்சர்

புதிய அரசியலமைப்பு சட்டம் ஒன்று விரைவில் கொண்டுவரப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – சங்கானையில் நிகழ்வு ஒன்றின் பின்னர் வெள்ளிக்கிழமை (03) ஊடகவியலாளர் ஒருவர் “புதிய அரசியலமைப்பு சட்டம் தொடர்பாக உங்களது அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பினார்.
புதிய அரசியலமைப்பு சட்டம் எமது கொள்கை பிரகடனத்தில் இருக்கின்ற ஒரு விடயம். நாங்கள் ஆட்சிக்கு வந்து ஒருவருடம்தான் நிறைவடைந்துள்ளது.
ஒரு வருடத்திற்கு முன்னர் இந்த நாடு எந்த நிலையில் இருந்தது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். இது மக்களுக்கு தெரியும். ஆனால் அரசியல்வாதிகள் தெரிந்தும் தெரியாதது போல நடிப்பார்கள்.
அந்தவகையில் புதிய அரசியலமைப்பு சட்டம் இந்த நாட்டு மக்களுடைய சகல பிரச்சினைகளையும் தீர்க்கும் வகையில், நீண்டு நிலைக்கக்கூடிய ஒரு சட்டமாக விரைவில் கொண்டுவரப்படும் என்றார்.
பகிரவும்...