பிரித்தானியாவில் ஜனவரி முதல் எரிசக்திக் கட்டணங்கள் 26% அதிகரிக்கப் படுகிறது
பிரித்தானியாவில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வீடுகளுக்கான எரிசக்திக் கட்டணங்கள் 26% அதிகரிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை திடீரென உயர்ந்துள்ளமையே இந்தக் கட்டண அதிகரிப்புக்கு முக்கிய காரணமாகவும் குறிப்பிடப்படுகிறது.
இந்த விலை உயர்வு பிரிட்டனில் மின்சாரம் மற்றும் எரிவாயு பயன்படுத்தும் குடும்பங்களின் மாதாந்த செலவுகளை அதிகரிக்கக்கூடும்.
குறிப்பாக, குளிர்காலத்தில் வீடுகளை வெப்பமாக வைத்திருக்க அதிக எரிசக்தி தேவைப்படும் நிலையில், இந்த அறிவிப்பு குடும்பங்களுக்கு மேலதிக நிதிச் சுமையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயற்கை எரிவாயுவின் சர்வதேச விலை உயர்வு, பிரித்தானியாவின் எரிசக்தி சந்தையில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் எரிசக்திச் செலவுகளைச் சமாளிக்க சிரமப்படும் மக்கள் அதிகம் பாதிக்கப்படலாம்.
இதேநேரம் எரிசக்திக் கட்டண உயர்வைத் தொடர்ந்து, குடும்பங்களின் வாழ்க்கைச் செலவு தொடர்பான கவலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன.
கட்டண உயர்வைச் சமாளிக்க எரிசக்தியைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளும் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.
