Main Menu

பிரான்ஸ் – பிரித்தானியாவுக்கு இடையிலான அகதிகள் பரிமாற்ற திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

பிரான்ஸ் – பிரித்தானிய அரசாங்கங்களுக்கு இடையில் ஒருவர் வெளியே’ (One-in, One-out) என்ற சர்ச்சைக்குரிய ஒப்பந்தம், அகதிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக எழுந்த சர்ச்சையை அடுத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவிலிருந்து பிரிட்டனுக்கு இங்கிலாந்து-பிரான்ஸ் கடல் கால்வாய் வழியாக சிறிய, ஆபத்தான படகுகளில் சட்டவிரோதமாகப் பயணிக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த உடன்படிக்கை எட்டப்பட்டது.

இந்த ஒப்பந்தம் காரணமாக ஆயிரக்கணக்கான அகதிகளின் வாழ்க்கையை நிச்சயமற்ற நிலையில் உள்ளதாக மனித உரிமைகள் அமைப்புகள் வன்மையாக கண்டித்துள்ளன.

2025 ஆம் ஆண்டு ஜூலை/ஆகஸ்ட் மாதம் கையெழுத்தான இந்த பரிசோதனை அடிப்படையிலான ஒப்பந்தம், பிரிட்டனுக்குச் சட்டவிரோதமாகப் படகு மூலம் வந்த ஒவ்வொரு புலம்பெயர்ந்தவரைப் பிரான்சுக்குத் திருப்பியனுப்பும் பட்சத்தில், அதற்கு ஈடாகப் பிரான்சில் உள்ள ஒரு தகுதியான புலம்பெயர்ந்தவரை (பெரும்பாலும் பிரிட்டனில் குடும்பத் தொடர்புகள் உள்ளவரை) சட்டப்பூர்வமாக பிரிட்டனுக்குள் அனுமதிக்க வழி வகுக்கிறது.

இந்த இருதரப்புப் பரிமாற்றத்தின் மூலம், சிறிய படகுகளில் பயணிக்கும் அபாயத்தைத் தடுத்து, கடத்தல்காரர்களின் வலையமைப்பை உடைப்பதே இதன் நோக்கமாகும்.

எனினும், பிரான்சிலும் பிரிட்டனிலும் உள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட மனித உரிமைகள் மற்றும் ஆதரவு அமைப்புகளின் கூட்டமைப்பு, இந்த ஒப்பந்தத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளன.

இந்தத் திட்டத்தை, மனிதத் தன்மையற்ற அரசியல் விளையாட்டிற்காக, அகதிகளின் தனிப்பட்ட மனிதப் பயணங்களை ஒரு ‘கணக்கு நடவடிக்கையாக’ மாற்றுவதாகவும், அவர்களைச்  சமநிலைப்படுத்தக்கூடிய அலகுகளாக  கருதுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த ‘ஒருவர் உள்ளே, ஒருவர் வெளியே’ ஒப்பந்தம் புகலிடம் கோரும் உரிமையைக் கூட ஒரு ‘பரிமாற்றப் பொருளாக’ (monnaie d’échange) மாற்றுவதாகவும், அகதிகள் பற்றிய ஜெனிவா உடன்படிக்கையின் அடிப்படைச் சாராம்சத்தை மீறுவதாகவும் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த ஒப்பந்தம் அமுல்படுத்தப்பட்ட சில நாட்களிலேயே, சட்டவிரோதமாகப் பிரிட்டன் சென்ற ஒரு இந்தியக் குடிமகன் பிரான்சுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.

இதனையடுத்து, மனித உரிமை அமைப்புகள் இந்தச் சட்டவிரோதப் பரிமாற்றத்தை இடைநிறுத்தக் கோரி, பிரான்சின் மாநில கவுன்சிலில் (Conseil d’Etat) சட்டப்பூர்வ மனுவைத் தாக்கல் செய்துள்ளன.

ஒட்டுமொத்தமாக, இந்தக் கொள்கை அகதிகளின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும், பிரிட்டனில் சட்டப்பூர்வமாக அனுமதி பெறுவதற்கான நடைமுறைகள் மிகவும் கட்டுப்பாடுகள் நிறைந்தவையாகவும், வெளிப்படைத்தன்மையற்றவையாகவும் இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அடுத்த வருடம் முதல் அமுலுக்கு வரவுள்ள இந்த நடைமுறையால்,  சூடான், ஆப்கானிஸ்தான், சிரியா போன்ற நாடுகளிலிருந்து வந்த அகதிகள் கூட, தாங்கள் பாதுகாப்புக் கோருவதற்கு முன்னரே, குற்றவாளிகளைப் போல் நடத்தப்பட்டு, பிரான்சுக்குத் திருப்பி அனுப்பப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

பகிரவும்...
0Shares