Main Menu

பிரான்ஸில் காட்டுத் தீ! 10,000 ஹெக்டேயர் வனப்பகுதி தீக்கிரை

பிரான்ஸின் அவூட் (Aude) மாவட்டத்தில் நேற்று மாலை ஏற்பட்ட பாரிய காட்டுத்தீயினால் ஏழு தீயணைப்புப்படை வீரர்கள் உட்பட 9 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் உள்ள 10,000 ஹெக்டேயர் வனப்பகுதி இதுவரை தீயில் கருகி, சாம்பல் மேடாக காட்சியளிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இக் காட்டுத் தீயினால் ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் எனவும், 3 வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளதாகவும், கிட்டத்தட்ட 6,000 வீடுகளுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...
0Shares