Main Menu

பாராளுமன்ற தேர்தல்கள் தொடர்பாக யாழில் உத்தியோகபூர்வ செயலமர்வு

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல்கள் தொடர்பிலான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் தேர்தல்கள் குறித்த முறைப்பாடுகளுக்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான உத்தியோகபூர்வ செயலமர்வு நேற்று சனிக்கிழமை (19) யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்த உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும், தெரிவத்தாட்சி அலுவலருமான  மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.

இச்செயலமர்வில் விசேடமாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய கலந்துகொண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான மேலதிக அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இச்செயலமர்வில் சிரேஷ்ட வட மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரி.சி.ஏ. தனபால, பிரதிப் பொலிஸ்மா அதிபர் றுவான் குணசேகர, பிரதிப் பொலிஸ்மா அதிபர் (கிளிநொச்சி) சமந்த டி. சில்வா, மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க. சிறிமோகனன், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி. எல்.ஏ. சூர்யபண்டார, பொலிஸ் அத்தியட்சகர் எம்.எம். சந்தன ஹமகே, உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், முறைப்பாட்டு முகாமைத்துவப் பிரிவின் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர் உட்பட சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.

இக்கலந்துரையாடல் ஜனாதிபதி தேர்தல்கள் தொடர்பான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் தேர்தல்கள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டு ஆராயப்பட்டன.

பகிரவும்...
0Shares