Main Menu

பாரம்பரிய கட்சிகளை மக்கள் நிராகரித்து உள்ளமை மகிழ்ச்சி அளிக்கிறது – குமார் குணரட்னம்

இந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்கவின் வெற்றியின் மூலம் பழைய பாரம்பரிய அரசியல் கட்சிகளை மக்கள் நிராகரித்துள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக என முன்னிலை சோசலிச கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார்.  கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  நாங்கள் ஜே.வி.பியுடன் இணைந்து நீண்டகாலம் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தோம்.  அதனால் அவர்கள் தொடர்பான நல்ல புரிந்துணர்வைக் கொண்டுள்ளோம்.  எனினும் இங்கு நபர்களுடனான தொடர்பைக் காட்டிலும் அரசியல் தேவையொன்று உள்ளது.  ஜே.வி.பியில் நாம் இருந்த இறுதிக் காலங்களிலும், முன்னிலை சோஷலிச கட்சியிலும் 21ஆம் நூற்றாண்டுக்குப் பொருத்தமான நியாயமானதொரு சமூக கட்டமைப்பொன்று அவசியம் என்பதை வலியுறுத்தி வந்துள்ளோம்.  தற்போதுள்ள முறைமையினூடாக அதனைக் கட்டியெழுப்ப முடியாது.  அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தற்போதுள்ள சமூக கட்டமைப்பின் காரணமாகவே யுத்தங்கள் தோன்றியுள்ளன.  எனவே அது மிகவும் தோல்வியடைந்த ஒரு முறைமையாகும்.  எனவேதான் நாம் புதிய சமூக கட்டமைப்பொன்றை வலியுறுத்தி வருகிறோம்.  எனினும் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக்கூடிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுமாயின் அதற்காக அரசாங்கத்திற்கு எந்த நேரத்திலும் ஆதரவை வழங்கத் தயார் எனவும் முன்னிலை சோஷலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரட்ணம் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...
0Shares