Main Menu

பாடசாலைகள் அருகே புகையிலை பொருட்கள் விற்கத் தடை

பாடசாலை வளாகங்கள் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.  மாணவர்கள், இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் குட்கா மற்றும் கூல் லிப் போன்ற பொருட்களைத் தடை செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டது.  இவ்வழக்கில் முதல் கட்டமாகப் பாடசாலை வளாகங்கள் அருகே புகையிலை பொருட்கள் விற்பதை இந்தியா முழுவதும் தடை செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  போதைப் பொருட்கள் விற்பனையைத் தடை செய்ய இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குட்கா பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பான இந்திய மத்திய அரசின் சட்டத்தில், திருத்தங்கள் செய்வது தொடர்பாகப் பதில் மனுத் தாக்கல் செய்யவும் இந்திய மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பகிரவும்...
0Shares