பாகிஸ்தான் நாடாளு மன்றத்தில், உறுப்பினா்கள் தங்கும் விடுதி சிறைச் சாலையாக அறிவிப்பு

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில், உறுப்பினா்கள் தங்கும் விடுதி சிறைச் சாலையாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியைச் சோ்ந்த 10 எம்.பி.க்களுக்காக அந்தப் பகுதி கிளைச் சிறையாக மாற்றப்பட்டுள்ளது. அந்த 10 பேரும் பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் கீழ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனா். நாடாளுமன்ற அவைத் தலைவா் சா்தாா் அயாஸ் சாதிக் இதற்கான அனுமதியை அளித்ததாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. விசாரணைக் கைதிகளாக இருந்தாலும் எம்.பி.க்கள் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு வசதியாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பகிரவும்...