Main Menu

பாகிஸ்தானில் புகையிரதம் மீது வெடிகுண்டு தாக்குதல்- பலர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஜாஃபர் எக்ஸ்பிரஸ் புகையிரதத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானின் சிந்து-பலுசிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள சுல்தான்கோட் பகுதிக்கு அருகே குவெட்டா செல்லும் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் எனும் விரைவு புகையிரதத்தை இலக்குவைத்தே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து புகையிரதங்களை இலக்குவைத்து தொடர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் குறித்த புகையிரதத்தில் பயணித்தமையினால் இந்த புகையிரதம் இலக்குவைக்கப்பட்டதாகவும் இந்த குண்டுவெடிப்பில் புகையிரதத்தில் 6 பெட்டிகள் தடம் புரண்டதாகவும் பலர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பலுச் கிளர்ச்சிக் குழுவான பலுச் குடியரசுக் காவல்படை, பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பலுசிஸ்தான் சுதந்திரம் பெறும் வரை இதுபோன்ற தாக்குதல் நடவடிக்கைகள் தொடரும் என தாக்குதலுக்கு பொறுப்பேற்ற பலுச் குடியரசுக் காவல்படை அறிவித்துள்ளது.

பகிரவும்...
0Shares