பர்தா அணிந்து வீதியில் சுற்றித்திரிந்த பாடசாலை மாணவன் கைது
பதுளை – பண்டாரவளை நகரத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றுக்கு அருகில் பர்தா உடை அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் வீதியில் சுற்றித்திரிந்த பாடசாலை மாணவன் ஒருவன் பண்டாரவளை பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை (09) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவன் ஆவார்.
கைதுசெய்யப்பட்ட பாடசாலை மாணவனின் பெற்றோர் வெளிநாட்டில் உள்ளதால் மாணவன் தனது சகோதரி மற்றும் பாட்டியுடன் ஒன்றாக வசித்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சகோதரியும் பாட்டியும் வீட்டில் இல்லாத போது சகோதரியின் பர்தா உடையை அணிந்து வீதியில் சுற்றித்திரந்ததாக மாணவன் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இது தொடர்பில் பண்டாரவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பகிரவும்...