Main Menu

பருத்தித்துறையில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த லொறி மீது துப்பாக்கிச் சூடு

பருத்தித்துறை பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி மணல் மற்றும் சந்தேகத்திற்கிடமான போதைப்பொருளுடன் பயணித்த லொறியொன்ற பின்தொடர்ந்துச் சென்ற பொலிஸார் வல்வெட்டித்துறை பகுதியில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து லொறியில் இருந்த சாரதியும் உதவியாளரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த லொறியில் பயணித்த உதவியாளர் காயமடைந்த நிலையில் மந்திகை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...
0Shares