பதுளை , மீகஹாகியுல்ல பிரதேசத்தில் மீளவும் மண் சரிவு
பதுளை , மீகஹாகியுல்ல பிரதேச பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று காலை மீண்டும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக மீகஹாகியுல்ல பிரதேச செயலாளர் நிர்மலா குமுதுனி தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த மண்சரிவு காரணமாக உயிர் அல்லது சொத்து இழப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், பாதுகாப்பு மையங்களுக்குச் செல்லாத ஒரு சில குடும்பங்கள் தொடர்ந்து இங்கேயே தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, பதுளை – மஹியங்கனை வீதியின் பல இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளர்.
இந்நிலையில், போக்குவரத்தை சரிசெய்ய வீதி அபிவிருத்தி அதிகாரசபை மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, குறித்த வீதியில் வாகனங்களைச் செலுத்துபவர்கள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
பகிரவும்...