பதவி விலகினார் சபாநாயகர்

சபாநாயகர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக அசோக ரன்வெல அறிவித்துள்ளார்.
தமது கல்வித்தகைமைகளை உறுதிப்படுத்தும் வரையில் சபாநாயகர் பதவியில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம் கலாநிதி பட்டம் பெற்ற ஜப்பான் பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் குறித்த ஆவணங்களை பெறுவதில் தற்போது சிரமங்கள் இருப்பதாகவும் அவற்றை பெற்று விரைவில் வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தமது பட்டம் தொடர்பில் எழுந்துள்ள குழப்ப நிலையை கருத்திற் கொண்டும் அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை பாதுகாக்கும் நோக்கிலும் தாம் சபாநாயகர் பதவியில் இருந்து விலகுவதாக அசோக ரன்வெல அறிவித்துள்ளார்.
கடந்த 21ஆம் திகதி அவர் சபாநாயகராக சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...