Main Menu

பங்களாதேஷ் புறப்பட்டார் அமைச்சர் விஜித ஹேரத்

வெளிவிவகாரஅமைச்சர் விஜித ஹேரத் இன்று (31) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பங்களாதேஷுக்குப் புறப்பட்டார்.

டாக்காவுக்குச் செல்லும் ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸின் UL 189 என்ற விமானத்தில் வெளிவிவகார அமைச்சர் நாட்டை விட்டு வெளியேறினார்.

அவர் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் பேகம் கலீதா ஜியாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வயது மூப்பினால் நீண்டகாலம் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் கலீதா ஜியா (Khaleda Zia) தனது 80 ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை (30) காலமானார்.

அவரது இறுதிச் சடங்கு இன்று இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...