நீர்வீழ்ச்சியிலிருந்து தவறி வீழ்ந்து இளைஞர் உயிரிழப்பு

மாத்தளை, கந்தேனுவரவில் உள்ள நலகன எல்லா நீர்வீழ்ச்சியில் நேற்று (12) மாலை தவறி விழுந்த 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்து மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் வத்தேகமவைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் நீர்வீழ்ச்சியைப் பார்வையிடச் சென்றிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சம்பவம் குறித்து கந்தேனுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பகிரவும்...