Main Menu

நாமல் ராஜபக்ஷ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களம் முன்னதாக விடுத்திருந்த அழைப்பிற்கிணங்க அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய இன்று முற்பகல் 10 மணியளவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்.
அதற்கு முன்னதாக ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர், தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டமைக்கான காரணம் அறிவிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
பகிரவும்...