Main Menu

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

இது நாளை (ஜனவரி 07) காலை 08.30 மணி வரை அமுலில் இருக்கும்.

கண்டி மாவட்டத்தில் உடுதும்பர, மாத்தளை மாவட்டத்தில் வில்கமுவ மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை ஆகிய இடங்களுக்கு அம்பர் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக NBRO தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், பதுளை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

பகிரவும்...