நானும் மோடியும் கைச்சாத்திட்ட தொலைநோக்கு ஆவணத்தை அனுர குமார நடைமுறைப் படுத்த வேண்டும் – இந்தியாவில் ரணில்

இந்தியாவும் இலங்கையும் கடந்த வருடம் கைச்சாத்திட்ட ஆவணத்தை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நடைமுறைப்படுத்தவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க பிடிஐக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நானும் பிரதமர் மோடியும் கைச்சாத்திட்ட தொலைநோக்கு ஆவணத்தில் இரண்டுநாடுகளிற்கும் இடையில் எந்தஎந்த துறைகளில் ஒத்துழைப்பை முன்னெடுக்கவேண்டும் என்பது குறித்து நாங்கள் தெரிவித்துள்ளோம்,திசநாயக்க முன்னோக்கி செயற்படவேண்டும் இதனை நடைமுறைப்படுத்தவேண்டும் என நான் கருதுகின்றேன் என ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பகிரவும்...மேலும் படிக்க உக்ரைன் மீது தாக்குதல் தீவிரம்: ஹைப்பர் சோனிக் ஏவுகணையை அதிகம் தயாரிக்க புதின் உத்தரவு