Main Menu

நாட்டை மாற்றுவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறோம் ; நளிந்த ஜயதிஸ்ஸ

நாம் மறுமலர்ச்சி காலத்தில் இருக்கிறோம். இந்த நாட்டை மாற்றுவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகிறோம். நாட்டின் எதிர்காலம் குறித்து எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளதென சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

3,147 தாதியர்களுக்கு நியமனங்களை வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (24) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்ததாவது,

தாதியர் சேவையில் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான நியமனங்கள் வழங்கப்படுவது இதுவேயாகும். புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதிலிருந்து ஒரே நேரத்தில் பொதுச் சேவையில் சேர்க்கப்படும் மிகப்பெரிய குழுவும் இதுவேயாகும்.

நாம் மறுமலர்ச்சி காலத்தில் இருக்கிறோம். இந்த நாட்டை மாற்றுவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகிறோம். நாட்டின் எதிர்காலம் குறித்து எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.

அந்த நம்பிக்கைகளை நிறைவேற்ற, அரசாங்கம் மட்டுமல்ல, நீங்கள் உட்பட, ஒட்டுமொத்த பொது சேவையும், அந்த இலக்கை நோக்கிச் செயல்பட வேண்டும். பொது சேவை தாய்மைப் பண்புகளுடன் செயற்படும் என்று நம்புகிறோம்.

பொது சேவை வினைத்திறனாகவும், திறம்படவும், சரியாகவும், மனிதநேயத்துடன் செயற்படாவிட்டால், நாம் எதிர்பார்க்கும் மறுமலர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை நோக்கி நகர முடியாது. நாங்கள் இப்போது அத்தகைய சூழ்நிலையில் இருக்கிறோம்  என்றார்.

இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜாசிங்க, சுகாதார அமைச்சின்  மேலதிக செயலாளர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

பகிரவும்...