Main Menu

நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுர

இந்தியாவிற்கான இருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துகொண்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் நேற்று இரவு (17) நாடு திரும்பினார்.

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுர அவர்கள் இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்ததுடன், இதன்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் இந்தியாவின் முன்னணி வர்த்தகர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளிலும் கலந்துகொண்டார்.

வௌிநாட்டு அலுவல்கள், வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோர் இந்த விஜயத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

பகிரவும்...
0Shares