Main Menu

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா யாழ்ப்பாணத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா மீது, கடந்த 20 ஆம் திகதி அனுராதபுரம் பகுதியில் போக்குவரத்து கடமையிலிருந்த காவல்துறையினருக்கு அழுத்தம் பிரயோகித்தமை மற்றும் அவர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

அதன்பின்னர் இது தொடர்பாக அனுராதபுரம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் சமர்ப்பணங்கள் முன்வைத்திருந்தனர்.

இந்தநிலையில், காவல்துறையினருக்கு அழுத்தம் பிரயோகித்தமை மற்றும் அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் வைத்து இன்று மாலை விசேட காவல்துறை குழுவினரால் சந்தேகநபரான நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதான நாடாளுமன்ற உறுப்பினர் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

பகிரவும்...
0Shares