Main Menu

நவம்பர் மாதத்தின் ஏற்றுமதி வருமானத்தை வெளியிட்டது இலங்கை சுங்கம்

இலங்கை சுங்கத்தின் தரவுகளுக்கமைய, கடந்த நவம்பர் மாதம் நாட்டின் மொத்த ஏற்றுமதி வருமானம் 1269.33 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது 0.04 சதவீத அதிகரிப்பாகும்.
அதேநேரம், கடந்த நவம்பர் மாதம் வர்த்தக பொருள் ஏற்றுமதி 943.1 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவானது.
கடந்த வருடம் நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 5.6 சதவீத வீழ்ச்சியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இறப்பர் சார்ந்த உற்பத்தி, உணவு மற்றும் குளிர்பானம் மற்றும் கடலுணவு ஏற்றுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சியே இதற்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
பகிரவும்...
0Shares