நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்று ஆரம்பம்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
இதேவேளை, நேற்றைய தினம் , செம்மணி பகுதியில் உள்ள நல்லூரான் வளைவிலும் , கைலாச பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ள நல்லூரான் தெற்கு வாசல் வளைவிலும் சேவல் கோடி நாட்டப்பட்டது.
இதேவேளை, ஆரம்பமாகும் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தை முன்னிட்டு நேற்றையதினம் வைரவர் உற்சவம் நடைபெற்றது.
மாலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வைரவர் வெளி வீதியுலா வந்ததுடன் , வெளிவீதி பிரகாரத்தில் சேவல் கொடிகள் பொருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.