Main Menu

தொடரும் இராணுவ மயமாக்கல் குறித்து பிரித்தானியா கவலை

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கையை வரவேற்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.

மேலும் பொறுப்புக்கூறலில் தொடர்ந்து முன்னேற்றம் இல்லாதது மற்றும் மனித உரிமை வழக்குகளில் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளமை குறித்தும் கவலை வெளியிட்டுள்ளது.

இதேவேளை சிவில் சமூகத்தின் கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தல் மற்றும் இராணுவ மயமாக்கல் குறித்தும் கவலையடைவதாக ரீட்டா பிரெஞ்ச் தெரிவித்துள்ளார்.

அத்தோடு வடக்கு மற்றும் கிழக்கில் காணி அபகரிப்பு மற்றும் சிறுபான்மை சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை குறித்து கவலையடைவதாகவும் அவர் கூறினார்.

ஆகவே 46 கீழ் 1 தீர்மானத்தில் உள்ள பரிந்துரைகளுடன் ஆக்கப்பூர்வமாக ஈடுபடுமாறும் அவர் இலங்கை அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பகிரவும்...